June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இன்று உலக காற்று தினம்

பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் வாழ்வில் அடிப்படை காற்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உணவும், நீரும் இல்லாமல் கூட மனிதனால் குறிப்பிட்ட காலம் வரை வாழ முடியும். காற்று இல்லாமல் சில வினாடிகள் கூட வாழ முடியாது. இத்தகைய மகத்துவம் மிக்க காற்றை, இன்றைய கால தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, இரசாயன புகை மூட்டம் போன்ற காரணங்களால் தொடர்ந்து மாசுபடுத்தி வருகிறோம். இதை கட்டுபடித்திடவும் சீர் செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு உயிரினத்திற்கும் உண்டு. அதை உணர்த்திட ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திட ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 15ஆம் தேதியை உலக காற்று தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஜரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும், இந்த தேதியை சர்வதேச அளவில் அறிவித்துள்ளது. உலக அளவில் காற்று மூலமாக அதிக அளவில் மின்சார உற்பத்தி செய்யும் நாடுகளில் நம்முடைய இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இது ஓரு புறமிருக்க, உலக அளவில் காற்று மாசு எற்பட்ட நகரமாக தில்லி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு காற்றை எக்கானமிஸ் பாடத்தில் (FREE GOOD) என்று படித்து இருப்போம். இன்று சுத்தமான காற்றை விலை கொடுத்து வாங்கிட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இத்தகைய நிலைய மாற்றிட காற்று மாசுபட்டை குறைக்கும் வகையில் மாற்றத்தை உருவாக்கிட, வாகனப் போக்குவரத்தை குறைத்து வீட்டு ஒரு மரம் வளர்க்க முன்வர வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் அதிகளவு ஆக்சிஜன் தரும் மரங்ளை நட முயற்சிப்போம். சுற்றுப்புற சூழ்நிலையால் எற்படும் பருவகால மாற்றத்தை தவிர்த்திட பசுமை போர்வை திட்டத்தின் வேளாண்துறை, வனத்துறை சார்பாக வழங்கப்படும், மரக்கன்றுகளை வாங்கி நடுவோம், காற்று மாசுபட்டை குறைத்து, சுத்தமான காற்றை சுவாசிக்க முயற்சிப்போம் என்ற உறுதி மொழியை இந்நன்னாளில் ஏற்போம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love