June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இன்று உலக சுற்றுசூழல் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத 5ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக ஐ.நா சபை 1972ஆம் ஆண்டு அறிவித்து, 50 ஆண்டுகளாகி விட்டது. இருந்த போதிலும் சுற்றுச்சூழல் நடவடிக்கையில் எதிர்பார்த்த மாற்றங்களும், ஏமாற்றங்களும் தான் நிறைய உண்டு. ஒரு பக்கம் கடுமையான வெப்பம், ஒழங்கற்ற மழை பொழிவு, பனி பொழிவு, கடுமையான வறட்சி, நீர் நிலை பாதிப்பு
போன்ற பாதிப்புகளுடன் தான் மனிதனும் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக 2019ஆம் ஆண்டு சர்வே படி அனைத்து வகை மாசுகளால் எற்பட்ட பாதிப்பால் 24 லட்சம் பேர் இறந்துள்ளதாக தரவு உள்ளது. இதனை சரி செய்ய நாம் அதிக அளவு மரங்களை நட வேண்டும். நீர்ப்பாசன நிலைகளில், சாய கழிவுகளை கலக்கக்கூடாது. நச்சு புகைகளை சுத்தபடுத்தி வெளியே விட வேண்டும். இன்று பெரிய பெரிய நகரங்கள் கூட மனிதன் வாழ தகுதியற்ற நிலையில் இருப்பதை மாத்திட வேண்டும். மண்ணுக்கும் மனிதனுக்கு உள்ள ஆரோக்கியமான உறவை மேம்படுத்த இந்த நாளில் உறுதி எடுப்போம். மாற்றம் என்பது தனிப்பட்ட மனிதனால் உருவாக்கபடுவதில்லை. ஒட்டு மொத்த சமுதாய விழிப்புணர்வாக செயல்பட்டு சுற்றுசுழலை பாதுகாத்திட உறுதி எடுப்போம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love