June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கையான முறையில் பயிர்களின் வளர்ச்சிக்கு-ஜீவாமிர்தம் கரைசல்

மதுரை, ஏப்.5

இயற்கை வளங்களில் உள்ள நுண்ணுயிரிகள் பயிர்களுக்குத் தேவைப்படும் மிக முக்கியமான காரணியாகும் என்று ஜீவாமிர்தம் தெரிவிக்கிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை செயல்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தை அதிகரிப்பதால் உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம். இந்த கலவையை இலைவழி தெளிப்பு, பாசன நீர், விதை அல்லது நாற்று சிகிச்சையில் பயன்படுத்தலாம். இதனை மாட்டுச்சாணம், மாட்டுக்கோமியம், தண்ணீர், பயறுமாவு, மண் மற்றும் வெல்லம் கொண்டு எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை மதுரை வேளாண் கல்லூரி மாணவி கவிமணி ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் கள்ளந்திரி பகுதியில் செய்து காட்டி விளக்கம் அளித்தார்.

Spread the love