June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை முறை விவசாயத்தின் முக்கியத்துவம்
வேளாண் மாணவர்கள் விளக்கம்

திருச்சி, மார்ச் 31

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருப்பட்டூர் உள்ள எம்.ஆர். பாளையம் , நாளந்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்கள் பத்து பேர் கொண்ட குழு, கிராமத்தில் தங்கி பயிற்சி பெரும் திட்டத்தின் கீழ் செங்கட்டுபட்டில் தங்கி அந்த கிராம விவசாயிகளுக்கு இயற்கை முறை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் இயற்கை உரம், பூச்சிகொல்லி தயாரிப்பு முறை பற்றியும் விளக்கம் அளித்தனர்.

மாணவர்கள் R. நரேந்திரன், R. நவீன் பாபு என்பவர்கள் பஞ்சகவ்யா கரைசலின் குணங்கள் பற்றியும், S.சிவசங்கர், S.ஸ்ரீதர் ஆகியோர் மோர் கரைசலின் ஆற்றலை பற்றியும், R.செந்தில்குமார், M. பரத் ஆகியோர் இணைந்து அக்னி அஸ்திர கரைசல் பற்றியும், S.செல்வகுமார், K.ஆறுமுகம் என்பவரும் இணைந்து நீமாஸ்திற கரைசலின் நலன்களை பற்றியும், S.கோகுலகிருஷ்ணன், D.நிதிஷ் ஆகியோர் இணைந்து வேப்பங்கொட்டை கரைசலின் நன்மைகளை பற்றியும் செயல் முறை விளக்கம் மூலம் எடுத்துரைத்தனர். இந்த விளக்க கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Spread the love