June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை விவசாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.31 லட்சம் விடுவிப்பு

புது தில்லி, ஏப்.5

இயற்கை வேளாண்மை என்பது பாரம்பரியமான உள்நாட்டு கால்நடைகளை பயன்படுத்தும் வேளாண் நடைமுறையாகும். இது ரசாயன உரம் அல்லது பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்ற வெளியேயிருந்து வாங்கும் அனைத்து வகையான பொருள்களிலிருந்து விவசாயிகளை விடுவிக்கிறது. இதனால் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள் பயனடைகிறார்கள்.

இயற்கை வேளாண்மை உள்ளிட்ட உள்நாட்டு பாரம்பரிய நடைமுறைகளை மேம்படுத்த பாரம்பரிய விவசாய மேம்பா்ட்டுத் திட்டத்தின் துணைத்திட்டமாக இந்திய இயற்கை விவசாய முறையை அரசு 2020-21-ல் அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிலத்தொகுப்பை உருவாக்குதல், பயிற்சி அளித்தல், கருத்தரங்குகளை நடத்துதல், போன்றவற்றுக்கு ஒரு ஹெக்டேருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.12,200 என 3 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இயற்கை வேளாண்மைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் 4.09 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பல்வேறு பயிர்கள் உற்பத்திக்கு ரூ.4,980.99 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் 2,000 ஹெக்டேரில் காய்கறி பயிர்கள், சாகுபடிக்காக 16.02.2021 அன்று ரூ.31.82 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதனைத் தெரிவித்தார்.

Spread the love