August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை விவசாயத்துக்கு கோட்டக்கலைத்துறை மாணியம்

திருப்பூர், ஜூன் 29

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2020-21 ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலமாக பயிருக்கு ஏற்றவாறு 78.6 ஹெக்பர்க்கு ரூ.5,000 வரை முதலாம் ஆண்டிற்கான மானியம் வழங்கப்பட்டது. தற்போது 2021-22 ஆண்டிற்கான மானிய திட்டங்களின் கீழ் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளும், செய்ய விரும்பும் விவசாமிகளுக்கு 100 ஹெக்டர் பரப்பளவில் இடு பொருட்கள் மானியத்தி வழங்கப்பட உள்ளது.

மேலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளும் செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகளும் தற்போது சாகுபடி செய்யப்புள்ள தோட்டக்கலை பயிர்களை குறிப்பிட்டு, சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி பாஸ் புத்தக நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2, ஆகியவற்றுடன், தாராபுரம் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அனுகலாம்:
மேலும் விபரங்களுக்கு, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் :

80980 58469, 97891 97648, 63813 95756, 82207 09645 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்

Spread the love