May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை விவசாயியுடன் வேளாண் மாணவிகள் கலந்துரையாடல்

கோவை, மார்ச் 11

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவிகள் ஹேமலதா, சுவேதா, ஆனந்தவள்ளி, பிரீத்தி, காயத்ரி, ஜோதி ரிஷிகா, சினேக பிரபா, கமலி, தீபாஞ்சனா மற்றும் ஸ்ரீலக்ஷ்மி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பவானிசாகரில் தங்கியுள்ளனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இயற்கை விவசாயியான அய்யா சோமசுந்தரத்துடன் கலந்துரையாடினர். அவர் இயற்கை முறையில் கரும்பு சாகுபடி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக செய்து வருகிறார். அவர் வயலிலேயே ஆட்டுப் பட்டி அமைத்து ஜிவாமிர்தம் அளிப்பதால் இயற்கையாகவே மண்புழுக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் மண்ணில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் மிகுந்தன. மேலும், மாணவிகளுக்கு பாரம்பரிய உணவு பற்றியும் இயற்கை முறை வாழ்வியல் பற்றியும் எடுத்துரைத்தார். வேளாண் மாணவிகள் அவரிடம் இருந்து கரும்பு நடவு முறைகள் பற்றி அறிந்து கொண்டனர். அவர் தன் வயலில் விளையும் கரும்புகளைக் கொண்டு நாட்டுச் சர்க்கரை தயாரித்து விற்பனை செய்கிறார். இந்தக் கலந்துரையாடல் மாணவிகளுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.

Spread the love