June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை வேளாண்மையின் நன்மைகள்

திருச்சி, ஏப்.4

திருச்சி மாவட்டம், லால்குடி, மைக்கேல்பட்டி, கிராமத்தில் நடத்தப்பட்ட அங்கக வேளாண்மை பயிற்சியில் நாளாந்த வேளாண்மை கல்லூரி மாணவிகள் தர்ஷினி மாளவிகா, ஷிபா, ஆர்த்தி, மௌனிகா, யாழ் மொழி, வர்ஷினி, சக்திபிரியா, துளசி, சுபலட்சுமி, அபிநயா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் எவ்வாறு இயற்கை வேளாண்மை செய்ய வேண்டும், இயற்கை வேளாண்மையின் நன்மைகளையும், இயற்கை வேளாண்மை பற்றிய புரிதலையும் விவசாயி நாராயணன் எடுத்துரைத்தார். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயி ஸ்டீபன் கென்னடி பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணத்தையும், அதன் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.

நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவிகள் அங்ககச்சான்றிதழ், மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, ரைசோபியம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

Spread the love