சிவகங்கை, ஜூன் 22
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரம் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநர் அ.வளர்மதி, இயற்கை வேளாண்மையில் அமுதக்கரைசல் மற்றும் தேமோர் கரைசல் தயாரிப்பு குறித்த தொழில் நுட்பங்கள் பின்வருமாறு வழங்கினார்.
அமுதக்கரைசல்
இக்கரைசல் ஓர் உடனடி வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. இதற்கு ஒரு லிட்டர் மாட்டுச் சிறு நீர், ஒரு கிலோ கிராம் மாட்டுச் சாணம் மற்றும் 250 கிராம் பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லம் தேவைப்படுகின்றது. 10 லிட்டர் நீரில் மாட்டுச் சாணத்தையும், மாட்டுச் சிறுநீரையும் ஊற்றி, பொடி செய்த பனங்கருப்பட்டியை இட்டு கரைசலை கட்டியில்லாமல் தயார் செய்து 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். இக்சரைசலை ஒரு லிட்டருக்கு, 10 லிட்டர் என்றளவில் (1:10) நீர்த்தக் கரைசல் தயார் செய்து கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். இந்தக் கரைசல் உடனடியாக தழை ஊட்டத்தை இலைவழியாக செடிகளுக்குக் கிடைக்கச் செய்வதோடு பூச்சிகளையும் விரட்டுகிறது.
தேமோர் கரைசல்