May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை வேளாண்மை தலைப்பில் ஒரு நாள் பயிற்சி

நாமக்கல், மே 10

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (KVK) வருகின்ற வெள்ளிக்கிழமை 13.5.22 காலை 10.00 மணிக்கு “இயற்கை வேளாண்மை (Organic Farming) என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் இயற்கை வேளாண்மை முறைகள், அங்கக வேளாண் இடுப்பொருட்களின் பயன்பாடு, மண்வள மேம்பாடு, ஜீவாமிர்த கரைசல் தயாரித்தல் பற்றி செயல்விளக்கம் மற்றும் அங்கக வேளாண் முறையில் பூச்சி நோய்கள் கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அங்கக சான்றிதழ் வாங்கும் முறைகள் பற்றி பயிற்சி

வழங்கப்பட உள்ளது. ஆகையால் இயற்கை வேளாண்மையில் ஈடுபாடு உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறோம். முன்பதிவுற்கு 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Spread the love