August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை வேளாண்மை பயிற்சி

நாமக்கல், ஜூலை 14

நாமக்கல் மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (KVK) வரும் 21.7.22 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு “இயற்கை வேளாண்மை (Natural & Organic Farming)” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் இயற்கை விவசாய முறைகள், அங்கக வேளாண் இடுப்பொருட்களின் பயன்பாடு, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை
முறையில் மண்வள மேம்பாடு, மண்புழு உரம் உற்பத்தி, ஊடுபயிர் சாகுபடி முறைகள், பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் கரைசல், மீன் அமிலம், EM கரைசல் தயாரித்தல் பற்றி செயல்விளக்கம், அங்கக வேளாண் முறையில் பூச்சி நோய்கள் கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அங்கக சான்றிதழ் வாங்கும் முறைகள் பற்றி பயிற்சி

வழங்கப்பட உள்ளது. ஆகையால் இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறோம். முன்பதிவுற்கு 04286-266345, 266650 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். பயிற்சிக்கு வரும் போது ஆதார் அட்டை நகல் கொண்டு வரவும்.

Spread the love