August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இரசாயன உரங்களுக்கு மாற்றாக உயிர் உரங்கள் பயன்பாடு குறித்த தகவல்

இன்றைய காலகட்டத்தில இரசாயன உரங்கள் வெளிநாட்டில் இறக்குமதி செய்வது எளிதல்ல. இருப்பினும் கடுமையான விலையேற்றத்தால் இவற்றை பயன்படுத்தி சாகுபடி செய்வதால் சாகுபடி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. அதற்கேற்ற விளைப்பொருட்களுக்கு விலை இல்லாத நிலை. இந்த மாதிரியான சமயங்களில் உயிர் உரங்களை பயன்படுத்தினால் ஓரளவு சாகுபடி செலவும் குறையும். மண் வளமும் பயிர் வளமும் நன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை. செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்துவதால் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, உயிர் சத்துகளை கிட்டுவதில்லை. உயிர் உரங்களில் பயிர்களுக்கு முக்கிய தேவையான தழை, மணி, சாம்பல் சத்துகள் தரக்கூடிய, அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபேக்டியா, பொட்டாஷ் பாக்டீரியா, (பேசில்லஸ் சிலிக்கேட் பாக்டிரியா) போன்றவை உள்ளன. தமிழகத்தில் 22 உயிர் உரங்கள் உற்பத்தி மையங்கள் உள்ளன. இதில் 8 வகை உயிர் உரங்கள் திரவ வடிவில் ஆண்டுக்கு
12 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்படுகின்றது. உயிர் உரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கும். இவற்றை விதை நேர்த்தி செய்ய, நிலத்தில் தொழு உரத்துடன் கலந்து ஊட்டமேற்றிய உரமாக தயாரித்து பயிர்களுக்கு இட்டால் மொத்த உர சிபாரிசில் 20 சதவிகிதம் குறையும். அதே நேரத்தில் கூடுதலான மகசூலும் மண் வளமும் பெருகும். விளைபொருட்களின் தரம், சுவை நன்றாக இருக்கும். இனி வருங்காலங்களில் இரசாயன உரத்தை படிப்படியாக குறைத்து அதிகளவிலான உயிர் உர பயன்பாட்டிற்கு மாறுவோம், சாகுபடி செலவை கணிசமாக குறைத்து, கூடுதலான வருமானம் பெற முயற்சிப்போம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love