July 7, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் விவோ நிறுவனம் பதிவு செய்துள்ளது ?

விவோ நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிஇஎன்ஏஏ இணையதளத்தில் V2066A மற்றும் V2069A என்ற இரண்டு மாடல்களை விவோ பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் 69A என முடியும் மாடல் 5ஜி தொழில்நுட்பத்தையும் 66A என முடியும் மாடல் 4ஜி தொழில்நுட்பம் கொண்டதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கசிந்துள்ள தகவல்களின் படி இரண்டு ஸ்மார்ட்போன்களுமே மிட் ரேஞ்ச் சாதனங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

V2066A ஒரு செவ்வக வரிசையில் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது மற்றும் V2069A மாடல் எண்ணைக் கொண்ட சாதனம் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அறிக்கை நாஷ்வில் சாட்டரில் இருந்து வெளிவந்துள்ளது. இதன் விவரக்குறிப்புகள் TENAA பட்டியல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

V2069A ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் முழு எச்டி பிளஸ் தெளிவு, 1080 x 2408 பிக்சல் துல்லியம் கொண்ட எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 2.2GHz ஆக்டா கோர் சிப்செட் புராஸசர் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி உடன் வெளிவரும் எனத் தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2எம்பி கேமரா கொண்ட டூயல் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் 8எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது. இதில் 4,910 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

V2066A மாடலில் 6.51 இன்ச் எச்டி பிளஸ் 720 x 1600 பிக்சல் துல்லிய எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இது 2.0GHz ஆக்டாகோர் சிப்செட் புராஸசர் கொண்டு இயக்கப்படும் என்று தெரிகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா, இரண்டு 2எம்பி கேமராக்களும் இருக்கும். முன்புறம், 8எம்பி சென்சார் இருக்கும். இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் 4,910 எம்ஏஎச் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் எனத் தெரிகிறது.

Spread the love