புதிய எம்ஐ11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஏப்.23ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது
எம்ஐ11 எக்ஸ், எம்ஐ11 எக்ஸ் ப்ரோ மற்றும் எம்ஐ11 அல்ட்ரா ஆகிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது ரெட்மி கே40 ப்ரோ+ மொபைலின் மறுபெயரிடப்பட்ட சாதனமாகவும், எம்ஐ 11 எக்ஸ் மொபைலானது ரெட்மி கே40 சாதனத்தின் மறுபெயரிட்ட பதிப்பாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன்களின் சில விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. டிப்ஸ்டர் தகவலின் படி, எம்ஐ 11 அல்ட்ரா மாடல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டாக அறிமுகமாகும். அதேபோல் எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ சாதனமானது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.
எம்ஐ11 எக்ஸ் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்ட்களில் வரும். இதில் 8 ஜிபி ரேம் மற்றும்128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.29,990 ஆகவும், 8 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.31,990 ஆகவும் இருக்கும். எம்ஐ 11எக்ஸ் ப்ரோ மாடலின் 8ஜிபி ரேம், 128ஜிபி வேரியண்ட் விலை ரூ.36,990 ஆகவும், 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.38,990 ஆகவும் இருக்கும்.
எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் டபிள்யூக்யூஎச்டி ப்ளஸ் இ4 அமோஎல்இடி டிஸ்ப்ளேவுடன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 240 ஹெர்ட்ஸ் டச் விகிதம் கொண்டிருக்கிறது. மேலும் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10+ சப்போர்ட் மற்றும் புதிய கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டிருக்கும். அத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 1.1 இன்ச் அமோஎல்இடி இரண்டாம் நிலை டச் மாதிரி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி திறனுடன், 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் 50 எம்பி பிரைமரி கேமராவுடன் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கும். முன்புறம் 20 எம்பி பஞ்ச் ஹோல் கட்அவுட் உடன் செல்ஃபீ கேமரா இருக்கும்.