June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இரவுநேர ஊரடங்கால் அரசுக்கு தினமும் ரூ.15 கோடி இழப்பு: போக்குவரத்துத் துறை

சென்னை, ஏப்.22

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கால் அரசுக்கு தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறதாக தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் 16,284 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2,790 பஸ்கள் இயக்ககப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 345 பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் குறைக்கப்பட்டு உள்ளது. 80 சதம் பஸ்கள் இரவில் இயக்கப்பட வேண்டிய பஸ்கள் முன்னுரிமை அடிப்படையில் பகல் நேரங்களில் மாற்றி இயக்கப்படுகிறது. பணிமனையில் இருந்து புறப்படும் பஸ்களும் சுத்தம் செய்யப்பட்டு பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. நோய் தடுப்பை கட்டுப்படுத்துவதற்காக நின்று கொண்டு பயணிக்க கூடாது என்பதால் அலுவலக நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

இரவு ஊரடங்கால் விரைவு போக்குவரத்து கழகம் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான போக்குவரத்து கழகங்களில் இரவு 11 மணியுடன் சேவையை நிறைவு செய்துவிடுவார்கள் என்பதால் 10 சதவீதம் மட்டுமே பாதிப்பு இருக்கிறது.

அதனையும் தற்போது இரவு 9.30 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love