ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பாக 16.6.22 அன்று இராமநாதபுரம் மாவட்ட மானாவாரி சாகுபடி விவசாயிகளுக்கான பண்னண பள்ளி அலைபேசி வாயிலாக நடைபெற்றது இந்த நிகழ்வில்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபா தனது உரையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை நமது மாவட்ட விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் முதன்முறையாக “DIGITAL FARM SCHOOL FOR PADDY’’ ஆரம்பிக்கப்பட்டு நெல் சாகுபடிக்கான ஆலோசனைகள் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வருகின்றது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான சந்தேகங்களை வேளாண் வல்லுநர் சு.சந்திர சேகரன் விளக்கமாக கூறினார். அவர் கூறுகையில் இந்த மாவட்டத்தில் சராசரியாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி நெல்லில் KCL மூலமாக விதை கடினப்படுத்துதல் முறை குறித்து விவரித்தார். சமீபத்தில் பெய்த மழை பயன்படுத்தி உழவு போட கூறினார். மேலும் கட்டணமில்லாத அலைபேசிவாயிலாக 1800 419 8800 தங்களது சாகுபடிக்கான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள விவசாயிகளை கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சிகான எற்பாடுகளை லிபிகா ராமு சிறப்பாக செய்திருந்தார்.
இராமநாதபுரம் மாவட்ட நெல் சாகுபடி விவசாயிகளுக்கான அலைபேசி வாயிலாக டிஜிட்டல் பண்னண பள்ளி கான்பரன்ஸ்
Spread the love