May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் ட்ரையம்ப் அறிமுகம் செய்தது

இந்தியாவில் இரண்டு ஸ்பெஷல் எடிசன் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது ட்ரையம்ப் நிறுவனம்

ஸ்க்ரம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்குயின் மற்றும் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் 900 சாண்ட் ஸ்ட்ரோம் ஆகிய இரண்டு ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு பைக்குகளும் தலா 25 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள இதில் ஸ்க்ரம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்குயின் எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13.75 லட்சமாகவும், ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் 900 சாண்ட்ஸ்ட்ரோம் எடிசனின் விலை ரூ.9.65 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்கள் அனைவரையும் கவரக்கூடியது என்றாலும் விலை கொஞ்சம் அதிகமாகத் தான் உள்ளது என்கிறார்கள் பைக் பிரியர்கள்.

மோட்டார் வாகனங்கள் மீது ஆர்வம் கொண்ட நடிகர் ஸ்டீவ் மெக்குயினின் பெயர் ஒரு மாடலுக்கு தரப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுபாடு காட்டுவதற்காக புதிய ஸ்டீவ் மெக்குயின் மாடல் ஸ்க்ரம்ப்ளர் 1200-இன் எக்ஸ்இ வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பச்சை நிற பெட்ரோல் டேங்க், தங்க நிற முன்பக்க ஃபோர்க்குகள் உள்ளிட்ட கவர்ச்சி அளிக்கின்றன. வேறுசில இடங்களிலும் தங்க நிற ஷேட்களைக் காணமுடிகிறது.

இது ஸ்பெஷல் எடிசன் பைக் என்பதை வெளிப்படுத்தும் லோகோக்கள் வாகனத்தின் ஹேண்டில்பாரிலும், பெட்ரோல் டேங்கிலும் இடம்பெற்றுள்ளன. இந்த எடிசனில் லிக்யுடு-கூல்டு, எஸ்ஓஎச்சி, பேரலல் டபுள் 1200சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அத்துடன் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சாண்ட்ஸ்ட்ரோம் எடிசன் ஆனது பஜா பென்னின்சுலா என்பவரைப் பெருமைப் படுத்துவது மற்றும் மறக்க முடியாத ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் பயணங்களை நினைவுக்கூறும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எடிசன் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை அடுத்து சாண்ட்ஸ்ட்ரோம் எடிசன் முரட்டுத்தனமான தோற்றத்தைப் பெற்றுள்ளது. இதில் மேட் ஸ்ட்ரோம் க்ரே & அயர்ன் ஸ்டோன் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

முன்பக்க மட்கார்ட் நீளம் அதிகரிப்பு, எல்இடி டெயில்லைட் அளவு குறைப்பு & நம்பர் பிளேட் லேம்ப், அலுமினியம் சம்ப் புரடக்சன், ஹெட்லைட் க்ரில் மற்றும் டிரைவர் மூட்டு பாதுகாப்பு ரப்பர் உள்ளிட்ட அம்சங்கள் இந்த எடிசனில் உள்ளன.

இந்த சாண்ட்ஸ்ட்ரோம் எடிசனில் லிக்யுடு-கூல்டு, எஸ்ஓஎச்சி, டபுள் பேரலல், 900சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 64.1 பிஎச்பி பவர் மற்றும் 80 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Spread the love