வானொலி வேளாண்மை பள்ளிப்பாடம்
சேலம், மே 19
சேலம் மாவட்ட வேளாண் பெருமக்களின் நலனுக்காக சேலம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும், அகில இந்திய வானொலியின் தர்மபுரி பண்பலை நிலையமும் இணைந்து வரும் 05.06.2022 முதல் 28.08.2022 வரை, 13 வார காலத்திற்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7.25 மணிக்கு தர்மபுரி பண்பலை வானொலியின் வயல்வெளி நிகழ்ச்சியில் “இலாபகரமான வெள்ளாட்டு பண்ணையத்திற்கான மேலாண்மை முறைகள்” என்ற தலைப்பில் வானொலி வேளாண்மை பள்ளிப்பாடம் நடத்தப்பட உள்ளது.
இந்த தொடர் ஒலிபரப்பில் தமிழக வெள்ளாட்டினங்கள் மற்றும் வெள்ளாடுகளைத் தேர்வு செய்யும் முறைகள், கொட்டகை அமைப்பு முறைகள், பசுந்தீவனங்கள் மற்றும் அடர்தீவன உற்பத்தி முறைகள், பேரிடர் கால மேலாண்மை முறைகள், வெள்ளாடுகளைத் தாக்கும் நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி நோய்களும் தடுப்பு முறைகளும், ஒட்டுண்ணி நோய்களும் தடுப்பு முறைகளும், வெள்ளாட்டு குட்டிகள் பராமரிப்பு முறைகள், முதலுதவிகள், மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவமும் பயன்பாடுகளும் என பல்வேறு தலைப்புகளில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வல்லுனர்களால் வானொலி பாடங்கள் நடத்தப்பட உள்ளது. வானொலி வேளாண் பள்ளிப்பாடத்தில் பதிவு செய்து, பயன்பெற விரும்புவோர் பதிவுக்கட்டணமாக ரூ.100/- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் கால்நடை மருத்துவமனை வளாகத்திலுள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செலுத்த வேண்டும். பயிற்சிக்கான முன்பதிவு ஜூன் 3 தேதி (03.06.2022) வரை நடைபெறும்.
வானொலியில் நடத்தப்படும் வேளாண் பள்ளிப்பாடங்கள் முடிந்தவுடன், கட்டணம் செலுத்தி பதிவு செய்த விவசாயிகளுக்கு ஒரு நாள் நேர்முக பயிற்சியும், பாடங்கள் அடங்கிய புத்தகமும், சான்றிதழும் வழங்கப்படும். பதிவு குறித்த தகவல்களைப் பெறவோ அல்லது மேலும் விபரங்களுக்கு 0427 – 2410408, 75300 52315 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.