May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இலை கருகல் நோயால் வெங்காய விவசாயிகள் கவலை

திருப்பூர், மே 4

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அதிக செலவு பிடிக்கும் இச்சாகுபடியில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பயிர்களுக்கு பல்வேறு நோய்த் தாக்குதல் ஏற்படுகின்றன. தற்போது வளர்ச்சித் தருணத்திலுள்ள, பயிர்களில், இலை கருகல் நோய்த் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஏற்படும் இந்நோய்த் தாக்குதலை, விவசாயிகள் கருகல் நோய் என அழைக்கின்றனர். சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுத்தும், இந்நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், திணறி வருகின்றனர்.

Spread the love