January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இலை வாழைக்கு ஆர்வம் அதிகரிப்பு

திருப்பூர், ஏப்.21

தென்னந்தோப்புகளில், ஊடுபயிராக, இலை வாழை ரகத்தை சாகுபடி செய்ய, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், ஏழு குள பாசனப்பகுதியில் மட்டுமே வாழை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கதளி, நேந்திரன் உட்பட பல்வேறு ரக

வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் கேரளா உட்பட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், பிற பகுதிகளில், அதிக தண்ணீர் தேவை, பல

மாதங்கள் பராமரிப்பு உட்பட காரணங்களால், வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு, அரசு தடை விதித்தது.

இதையடுத்து, உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் பார்சல் செய்ய, பயன்படும், வாழை இலைக்கான தேவை அதிகரித்தது. பிற மாவட்டங்களில் இருந்து வாழை இலை வரத்து குறையும்

போது சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு, வாழை இலைக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள், இலை வாழை ரக கன்றுகளை

நடவு செய்து, சாகுபடியை துவக்கியுள்ளனர். தற்போது, தளி, வாளவாடி சுற்றுப்பகுதிகளில், தென்னந்தோப்புகளிலும், காய்ப்புக்கு வராத தென்னங்கன்றுகள் உள்ள விளைநிலங்களிலும்

இவ்வகை சாகுபடி அதிகரித்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தோப்புகளில், தென்னை மரங்களுக்கு இடையே வாழையை ஊடுபயிராக பராமரிப்பதால், மண் வளம் அதிகரிக்கும். வாழை இலைக்கு நிலையான

விலை கிடைப்பதால், அந்த ரகத்தை பெரும்பாலானவர்கள் தேர்வு செய்கின்றனர். பருவமழை ஒத்துழைத்துள்ளதால், நடப்பு சீசனில், வாழை சாகுபடி பரப்பு கூடுதலாகும் வாய்ப்புள்ளது என்றனர்.

Spread the love