June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இளஞ்சிகப்பு காய்ப் புழு மேலாண்மை குறித்து சிவகாசி வட்டார விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

விருதுநகர், ஏப்.2

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் உள்ள சுக்கிரவாரப்பட்டி கிராமத்து விவசாயிகளுக்கு ஊரக வேளாண் அனுபவத் திட்டதின் கீழ், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள சு.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சபரிவாசன், லட்சுமணன், சரவணக்குமார் ஆகியோர் இளஞ்சிகப்பு காய்ப் புழு மேலாண்மை குறித்து சிவகாசி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

தாக்குதலின் அறிகுறிகள்:
● முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் கப்பைகளையும், மொக்குகளையும் , பூக்களையும் மற்றும் இளம் காய்களையும் தாக்கி அழிக்கும்.
● தாக்கப்பட்ட மொட்டுகள் உதிர்ந்து விடும்.
● தாக்கப்பட்ட மலர்கள் நெருக்கமாய் குவிந்து காணப்படும்.
● வளர்ச்சியடைந்த புழு காயினைத் துளைத்து உள்ளே சென்று உண்டு சேதம் விளைவிக்கும்,விதைகளையும் தாக்கும்.
● இதனால் தாக்கப்பட்ட பஞ்சுகள் கரைபடிந்து காணப்படும்.

கட்டுப்பாடு:
● பயிர் சேதங்களை அகற்றி வயல்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
● நிலத்தை ஆழமாக உழுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
● சரியான பருவத்தில் விதைப்பு செய்வதன்மூலம் இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
● தண்ணீர் தேங்குதலைத் தவிர்க்க வேண்டும்.
● இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பொழுது எக்டர்க்கு ட்ரைசோபாஸ் 2.5 லிட்டர் அல்லது எண்டோசல்பான் 2 லிட்டர் மருந்தைத் தெளித்து இளஞ்சிகப்பு புழுவின் தாக்குதலைக் குறைக்கலாம்.

● இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5-7 எண் வைக்க வேண்டும்.

Spread the love