மதுரை, மார்ச் 10
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் உள்ள மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவி வெ.மீனாட்சி, கோவிலாங்களம் கிராமத்தில் பருத்தியினைத் தாக்கும் இளஞ்சிவப்பு புழுவினைக் கட்டுபடுத்த இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துவது குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். 5 இனக்கவர்ச்சி பொறிகள் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்த வேண்டும். இனக்கவர்ச்சி பொருளானது ஒவ்வொரு சிற்றினத்திற்கும் மாறுபடும். இந்த இனக்கவர்ச்சி பொருளின் தன்மை 30 நாட்கள் வரை நீடிக்கும்.
Spread the love