கோவை, ஏப்.26
பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இந்த வாரமும் இளநீர் பண்ணை விற்பனை விலையை, ஒரு ரூபாய் உயர்த்தியுள்ளனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், கோடை வெயில் அதிகரித்து, தமிழகம் முழுவதிலும் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது, புது தில்லி பகுதிகளில் அதிகளவில் இளநீர் தேவைப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை தாலுகா பகுதிகளில் இருந்து, புது தில்லி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைவு, தேவை அதிகரிப்பின் காரணமாக, இந்த வாரமும் இளநீர் விலை உயர்ந்துள்ளது. 26ம் தேதி முதல், வீரிய ஒட்டு ரக இளநீர் ஒன்று, பண்ணையில் வியாபாரிகளுக்கு, ரூ.33க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டது. எடைக்கு வழங்கினால், ஒரு டன் இளநீர், ரூ.12,500க்கு விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.