கோவை, மே 17
பண்ணை கொள்முதல் இளநீர் விலை ரூ.32 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், இளநீர் வரத்து குறைந்துள்ளதால், தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரத்து குறைவு தேவை அதிகரிப்பால், இளநீர் விலை குறையவில்லை. இந்த வாரமும் இளநீரின் தரத்தை பொறுத்து விவசாயிகள், ரூ.30 முதல் ரூ.32 வரையில் விற்பனை செய்ய வேண்டும். எடைக்கு விற்பனை செய்தால், ஒரு டன் இளநீர், ரூ.12,000க்கு விற்பனை செய்ய வேண்டும். இத் தகவலை, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
Spread the love