August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இ-ஸ்கூட்டருக்கு தனி டிரேட்மார்க் ஹோண்டா பதிவு செய்தது

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கென தனி டிரேட்மார்க்கைப் பதிவு செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

பிசிஎக்ஸ் எனப்படும் மின்சார ஸ்கூட்டருக்காக அந்த நிறுவனம் டிரேட்மார்க் பதிவை செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் புதிய இருசக்கர வாகனத்தின் பேடண்ட் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

ஏத்தர், ஹீரோ எலெக்ட்ரிக், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது இந்தியச் சந்தையில் ஓரளவு விற்பனை ஆகி வரும் நிலையில் ஹோண்டா பிசிஎக்ஸ் அறிமுகம் ஆனால் சந்தையில் போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹோண்டா வாகனங்களுக்கான தனித்த வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த இ-ஸ்கூட்டர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்ஸி ரக ஸ்டைல், ஸ்வாப்பபிள் பேட்டரி வசதியை இந்த மின்சார ஸ்கூட்டர் பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தனித்தனி ஃபுட்போர்ட், நீளமான இருக்கை, கருப்பு நிற அலாய் மற்றும் கிராப் ரெயில்கள் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அலாய் ஃபுட் பெக்குகள், டெலிஸ்கோபிக் ஃபோர்க், ஸ்கூட்டரின் பின்பக்கத்தின் இரு புறங்களிலும் ஷாக் அப்சார்பர்கள், 220 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் (முன் மற்றும் பின் பக்கங்களில்), முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், சி-போர்ட் யுஎஸ்பி, ரிமோட் சாவி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களையும் இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இ-ஸ்கூட்டரின் டிரேட்மார்க் பதிவு மற்றும் அறிமுகம் தொடர்பாக ஹோண்டா நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அளிக்காவிட்டாலும், விரைவிலேயே அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love