ஈரோடு, ஏப்.22
ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் க.ஜெயராமன், விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் முறையான ஆவணங்கள் மற்றும் தற்போதைய நடப்பு கோடை பருவத்திற்கு ஏற்புடையதாக இல்லாத 9 (ஒன்பது) விதை குவியல்களுக்கு விதை விற்பனை தடை பிறப்பித்தார். இதன் மதிப்பு சுமார் ரூபாய் 75 லட்சம் ஆகும். மேலும் விதை விற்பனை உரிமையாளர்கள் அனைவரும் விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பதிவேடு, விற்பனை பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்பு திறன் அறிக்கை ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் இவைகளை பராமரிக்க தவறும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார். விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் பொழுது, விதை உரிமம் எண், குவியல் எண், காலாவதி நாள், அடங்கிய விபரங்களை விவசாயிகளின் கையெழுத்துடன் விதை விற்பனை இரசீதுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது விதை ஆய்வாளர் செ.நவீன் உடனிருந்தார்.
Spread the love