ஈஸ்வரமூலி இதை தலைசுருளி பெருமருந்து என்றும் அழைப்பார்கள். நீண்ட மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும், பச்சை, வெள்ளை சூழல் வடிவ மலர்களையும் கொண்ட ஏறு கொடி. மிகவும் கசப்புச் சுவையை உடையது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. மாதவிடாய் தூண்டும், தாது பலப்படும், உடல் வெப்பம் உண்டாக்கி முறை நோய்களை அகற்றும் மருந்தாகவும் செயல்படும். வேரை 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு எட்டில் ஒரு பங்காக காய்ச்சி 30 மில்லியாக 2 அல்லது 3 வேளை கொடுக்க உதிரச் சிக்கல் தீரும். பாம்பு கடி, தேள் கடி, விஷம் நீங்க கடிவாயில் இலையை கசக்கி தேக்கலாம். தேனில் ஊர உரைத்து ஒரு கிராம் உள்ளுக்குக் கொடுத்துவர வெண்குட்டம் சோகை தீரும் மற்றும் 4448 வகை நோய்களை தீர்க்க கூடியதால் பெருமருந்து என்றும் பாம்புக் கடியில் இருந்து மீள பழங்குடியின மக்கள் இதன் வேரை கடவாய் பற்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு பாம்பு பிடிப்பார்கள். அதே நேரத்தில் அந்த வேரிலிருந்து வரக்கூடிய வாசம் பாம்பிற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் தலையை கீழே போட்டு விடும். இதன் காரணமாக தலைச்சுருளி என்றும் ஈஸ்வரமூலி என்றால் ஈஸ்வரனுக்கு சவால்விட்ட மூலிகையாகும்.
ஈஸ்வரமூலி

Spread the love