May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உடல் வெப்பநிலை 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வர அனுமதியில்லை

தமிழக தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை, ஏப்.29

தமிழகத்தில் வரும் மே-1 மற்றும் மே-2ம் தேதிகளில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தெரிவித்துள்ளார்.

மே-2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வரும் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

ஓட்டு எண்ணிக்கை தொடர்பான விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு குறித்து அரசுதான் முடிவு செய்யும் என தெரிவித்தார். மேலும், ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு உடல் வெப்பநிலை 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வர அனுமதியில்லை. மேலும் கோவிட் தொற்று இல்லை என்ற சான்றிதழ் அளித்தாலும் உடல்வெப்நிலை அதிகமாக இருந்தால் அவர்களுக்கும் அனுமதியில்லை என சாஹூ தெரிவித்துள்ளார்.

Spread the love