திருப்பூர், ஏப்.26
மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால், உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், முன்னதாகவே கோடை வெயில், துவங்கியதால், விவசாய சாகுபடி பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், குறிப்பிட்ட இடைவெளியில் பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும், உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், மழை பெய்தது. ரயில்வே ஸ்டேஷன் ரோடு உட்பட ரோடுகளில், மழை நீர் வெளியேறாமல், ஆங்காங்கே தேங்கியது. அமராவதி உட்பட அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில், மழை தீவிரமடைந்தால், இந்த கோடை சீசனில், சாகுபடிகள் பாதிப்பதை தவிர்க்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.