புது தில்லி, ஏப்.5
பருவநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பசுமை மற்றும் கரியமில உமிழ்வு குறைவான தொழில்நுட்பங்களை உணவுப் பதப்படுத்தும் துறையில் மேற்கொள்வதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் அமைச்சகம் மேற்கொண்டு வருவதுடன் நிதியுதவியும் அளித்து வருகிறது.
இத்திட்டங்கள் மூலம் நாட்டில் உணவுப்பதப்படுத்துதல் தொடர்பான நவீன உள்கட்டமைப்பை அமைக்க ஒத்துழைப்பு அளிப்பதுடன் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலையை நிலைப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துச் செல்லுதல் மற்றும் இருப்பு வைத்தல் தொடர்பான செலவுகளுக்கு நிதி ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது என உணவுப்பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.
Spread the love