May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உப்புக்கரைசல் மற்றும் 3G கரைசல் செயல் விளக்கப் பயிற்சி

விருதுநகர், மார்ச் 11

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட S. தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகளான ஐஸ்வர்யா, ஆமினா சபிகா, அனுகெங்கா, ஆயிஷா, பிளஸ்ஸி பியோரினா, டயானா, நர்மதா, வனிதா, நிலோபர், வகிதா ரசூல் ஆகியோர் வேளாண் அலுவலர்களுடன் இணைந்து உப்புக்கரைசலைக் கொண்டு சோளத்தில் விதை நேர்த்திக்கான விளக்கப் பயிற்சியும் மற்றும் இயற்கை பூச்சி விரட்டியான 3 Gகரைசல் பற்றியும் ரெட்டியபட்டி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். மேலும் உப்புக் கரைசல் மூலம் நல்ல விதைகளை தேர்ந்தெடுக்க முடியும் எனவும் 3G கரைசல் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் எனவும் அம்மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.


Spread the love