இராமநாதபுரம், ஏப்.22
வெயில் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில், கிழக்கு கடற்கரை பகுதியான திருப்பாலைக்குடி, தேவிபட்டினம், நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடந்த வாரம் பெய்த மழையால்,
உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. பாத்திகளில் மழைநீர் தேங்கியதால், தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தி இருந்தனர். கடந்த சில நாட்களாக உப்பு
உற்பத்திக்கு ஏற்ற வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், தொழிலாளர்கள் உப்பள பாத்திகளில், தேங்கிய தண்ணீரை வெளியேற்றி, உப்பு உற்பத்தியை துவங்கியுள்ளனர். தற்போது நிலவி வரும்
சீதோஷ்ண நிலை (வெயில்) உப்பு உற்பத்திக்கு ஏற்றது என தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதனால், இப்பகுதிகளில் தொழிலாளர்கள் பணிகளை துவக்கியுள்ளனர்.