ஈரோடு, ஏப்.27
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடிப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்களைக் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் இரகமான பாசிப்பயறு கோ 8 வல்லுநர் விதைப்பண்ணை பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விதைப்பண்ணையினை ஈரோடு, விதைச்சான்று மற்றம் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம், என்.சக்திவேல், பேராசிரியர் மற்றும் தலைவர் உத்தராசு, உதவிப் பேராசிரியர் (மரபியல்), கவிதாமணி, உதவிப் பேராசிரியர் (மரபியல்), அருணாஜோதி, விதைச்சான்று அலுவலர், சத்தியமங்கலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து, ஈரோடு விதைச்சான்று மற்றம் அங்ககச்சான்று உதவி இயக்குநர் கூறியதாவது, இந்த பாசிப்பயறு இரகமானது 55 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஒரே தடவையில் இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடை செய்யலாம். மற்ற இரகங்களைவிட 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் தரவல்லது. மேலும் காரீப், ராபி பருவங்கள், மானாவாரி மற்றும் இறவைக்கும் ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 1050 கிலோ வரை மகசூல் கிடைப்பதுடன் மஞ்சள் தேமல் நோயை தாங்கி வளரக் கூடியது என்றார்.