May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உயிருட்டும் ஊட்டச்சத்து பொதி வழங்கிய வேளாண் மாணவர்கள்

ராணிப்பேட்டை, மார்ச் 15

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை கிராமத்தில் தொன்போஸ்கோ வேளாண்மை கல்லூரி மாணவர்களால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து பொதி குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இம்முறையில் விதை இயற்கை உரம் செயற்கை உரம் அனைத்தும் கலந்த கலவையாக உள்ளதால் சத்துக்கள் வீணாவது தடுக்கப்படுகிறது. இத்தொழில்நுட்பம் காய்கறிகள், மலர்கள் மற்றும் தொட்டி செடிகளுக்கு உகந்ததாக உள்ளது. செயல்முறை விளக்கத்தில் பங்குபெற்ற விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து பொதி வழங்கப்பட்டது.

Spread the love