October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உயிர் உர மற்றும் மட்கும் உர உற்பத்தி தொழில்நுட்ப தேசிய பயிலரங்கம்

கடலூர், அக்.9

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் நுண்ணுயிரியல் துறையில் நுண்ணுயிர் உயிரி தொழில்நுட்ப உயிர் உர மற்றும் மட்கும் உர உற்பத்தி தொழில்நுட்பம் எனும் தலைப்பில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

முனைவர் வீ.முரளிகிருஷ்ணன், பேராசிரியர் மற்றும வேளாண் நுண்ணுயிரியல் துறை தலைவர், வரவேற்புரையாற்றினார். பேராசிரியல் முனைவர் ம.கணபதி, வேளாண் புல முதன்மையர் பயிலரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் முனைவர் வீ.முரளிகிருஷ்ணன், முனைவர் இரா.இளங்கோ, முனைவர் எஸ்.மகாலட்சுமி, முனைவர் சி.பாரதிராஜா, முனைவர் கோ.குமரேசன் மற்றும் முனைவர் ப.சிவசக்திவேலன் ஆகியோர் எழுதிய புத்தகத்தின் முதல் படியை வேளாண் புல முதன்மையர் முனைவர் ம.கணபதி, வெளியிட முனைவர் வீ.முரளிகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப நிகழ்வில் முனைவர் ரெ.பார்த்தசாரதி, பயிர் வளர்ச்சியில் மெத்திலோபாக்டீரியாவின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்ற முனைவர் செந்தில்குமார், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை வேளாண் நுண்ணுயிரியல் துறை இணைப்பேராசிரியர், அறிமுகம் செய்தார். நுண்ணுயிரிகளின் மூலம் பயிர்களுக்கு தேவையான சாம்பல் சத்து எனும் தலைப்பில் உரையாற்ற முனவைர் பிருந்தாவதி, இணைப்பேராசிரியர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம், முனைவர் எஸ்.மகாலட்சுமி அறிமுகம் செய்தார். முனைவர் சி.பாரதிராஜா, முனைவர் செல்வகுமார், முதுநிலை விஞ்ஞானி (நுண்ணுயிரியல்), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பெங்களூர், நகரமைப்பு திடக்கழிவு மேலாண்மை எனும் தலைப்பில் உரையாற்ற அறிமுகம் செய்தார். முனைவர் கோ.குமரசேன், தொழில் முனைவோர் பாலமுருகன், சுருள்பாசி சந்தை மயமாக்கல் மற்றும் அதன் சவால்கள் எனும் தலைப்பில் உரையாற்றி அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து உயிர் உர உற்பத்தி மையத்தின் செயல்பாடு மற்றும் திடக்கழிவு மேலாண்மை உத்திகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ள களப்பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முனவைர் இரா.இளங்கோ, பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.

Spread the love