June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உரங்களில் இத்தனை வகைபாடுகளா?

பொதுவாக நாம் விவசாயத்திற்கு உரங்களை பசுமை புரட்சிக்கு பின் வாங்கி போட்டு வருகிறோம் அதில் உள்ளவகைபாடுகள் பலருக்கும் தெரியாத நிலையில், இங்கு சற்று விரிவாக உரங்களின்ஊட்டசத்துகளின் நிலை, எண்ணிக்கை அதன் செயல் பாடு தன்மை யைப் பொருத்து உரங்கள் வகைபடுத்தப்பட்டுள்ளன.
1) கரிம உரம் (0RGANIC FERTILIZER)
மண்ணின் இயற்பியல் பண்புகளை அதிகரிக்க, அதிக அளவாக சேர்க்க படும் கரிமத்தை (C) கொண்டுள்ள இயற்கையான பொருளே கரிம உரம் அல்லது இயற்கை உரம் எனப்படும்
எ.டு ,தொழுஉரம்,கம்போஸ்ட், உயிர் உரம்
2) கனிம உரம்( INORGANIC FERTILIZER)
பயிருக்கு தேவையான ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை அளிக்கும் செயற்கை இரசாயன பொருளே கனிம உரம் அல்லது இரசாயன உரம் எனப்படும்
எ.டு, யூரியா,டி.ஏபி
3)நேரிடி உரம்(STRIGHT FERTILIZER)
பேரூட்ட சத்துகளான தழை,மணி சாம்பல் சத்துகளில் ஏதாவது ஓன்றைமட்டும் அளிக்கும் உரம் நேரடி
உரம் எனப்படும்
எ .டு,யூரியா— தழை சத்து
சூப்பர் பாஸ்பேட்–மணிசத்து
மியூரேட் ஆப் பொட்டாஷ்—சாம்பல் சத்து
4) கலப்பு உரம்( MIXED FERTILIZER)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நேரடி உரங்கள் சேர்ந்த கலவைக்கு கலப்பு உரம் என்று பெயர்.இதில் தழை,மணி,சாம்பல் சத்துகளை முழுமையாக அளித்தால் அது முழுமையான உரம் எனப்படும்
எ.டு, NO 10,கலப்பு உரம்
5) கூட்டு உரம்( COMPLEX FERTILIZER)
இரண்டு ,அதற்கு மேற்பட்ட பயிர் ஊட்டச்சத்துகள் சரியான விகிதாச்சார முறைபடி சேர்க்க பட்ட உரத்திற்கு கூட்டு உரம் எனப்படும்
எ.டு,17:17:17,19:19:19
6) அமில உரங்கள் ( ACIDIC FERTILIZER)
நிலத்தில் இவ்வகையான உரங்களை இட்டு வந்தால், தொடர்ந்து அமில தன்மை அதிகரிக்கும்
எ.டு,ஜிப்சம்
7)கார உரங்கள்( BASIC FERTILIZER)
இவ்வகையான உரங்களை நிலத்தில் தொடர்ந்து இடுவதால் காரத்தன்மை அதிகரிக்கும்
எ,டு,சோடியம் நைட்ரேட்
8)நடுநிலை உரங்கள்(NEUTRAL FERTILIZER)
இவ்வகையான உரங்களை நிலத்தில் இடுவதால்,அமில தன்மையோ, காரத்தன்மையோ, எற்படுவதில்லை
இந்த வகையினை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய நிலத்தின் தன்மையை அறிந்து,தேவையான உரங்களை ,மண்பரிசோதனை பரிந்துரைபடி இட்டு வளமான மகசூல் எடுப்போம்,விவசாயத்தில் புரட்சி காண்போம்

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love