January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி

திருவள்ளூர், மே 13

கடம்பத்துாரில் உரங்கள் கிடைக்காமல், நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்படுகிறது. தற்போது சொர்ணவாரி பருவத்தில், சத்தரை, புதுமாவிலங்கை, கொண்டஞ்சேரி, கூவம் உட்பட பல பகுதிகளில், விவசாயிகள் நெல் பயிரை ஆர்வமாக பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், டி.ஏ.பி., மற்றும் ஈப்கோ காம்ப்ளக்ஸ் உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் உட்பட தனியார் கடைகளிலும், டி.ஏ.பி., உரங்கள் இருப்பு இல்லாததால், விவசாயிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில், நெற்பயிருக்கு தேவையான டி.ஏ.பி., மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்களது சந்தேகங்களை வேளாண் துறை அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்தார்.

Spread the love