January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்

நாமக்கல், டிச.25

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் நாமக்கல் காவல்நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளிலும் உரிமை கோரப்படாத நிலையிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள (6) வாகனங்கள் நாமக்கல் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேற்படி வாகனங்களின் விபரங்கள் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட வாகனங்களின் உரிமைதாரர்கள் தங்களது வாகனங்களுக்கான ஆவணங்களை மேற்படி காவல் நிலையத்ததில் சமர்ப்பித்து இந்த அறிவிப்பு பிரசுரம் செய்யப்பட்ட 15 தினங்களுக்குள் தங்களது வாகனங்களை மீட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
15 தினங்களுக்கு மேலாக உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு அதில் கிடைக்கப்பெறும் தொகையானது அரசு கணக்கில் செலுத்தப்படும் என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என நாமக்கல் வட்டாட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love