August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உர நிறுவனங்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

மதுரை, ஜூலை 8

7.07.2022 அன்று மதுரை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் தலைமையில் அனைத்து உர உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மொத்த உர விற்பனையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் (ECA) நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) மற்றும் அனைத்து உர உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மொத்த உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உரங்கள் விநியோகம் மற்றும் இருப்பு விபரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

யூரியா 1100 மெ.டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் 500 மெ.டன், பொட்டாஷ்-500 மெ.டன், காம்ப்ளக்ஸ் 1000 மெ.டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 300 மெ.டன் ஜூலை-2022 ஆம் மாதத்தில் உரங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக உர நிறுவனத்தார்கள் தெரிவித்தனர். தற்போது போதுமான அளவில் உரங்கள் இருப்பு உள்ளது என்றும் விவசாயிகளுக்கு உர தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். POS Machine-ஐ சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் கிராம வாரியாக விவசாயிகளின் உர தேவையை கணக்கிட்டு சரியான முறையில் உர விநியோகம் செய்ய வேண்டும் எனவும், லைசென்ஸ் உள்ள இடத்தில் மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.

Spread the love