மும்பை, ஏப்.26
இத்தாலி நாட்டு இருசக்கர நிறுவனமான வெஸ்பா நிறுவனம் உற்பத்தியில் 1.9 கோடி யூனிட்களை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: இந்த ஆண்டு 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வெஸ்பா தனது 1.9 கோடி யூனிட் ஜிடிஎஸ் 300 75-வது ஆண்டுவிழா ஸ்பெசல் எடிசன் மாடல் என தெரிவித்துள்ளது. இந்த யூனிட் பொன்டெடரா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
மேலும், ஸ்பெசல் எடிசன் வேரியண்ட்கள் வெஸ்பா ஜிடிஎஸ் 125சிசி மற்றும் 300சிசி, வெஸ்பா ப்ரிம்வெரா 50சிசி, 125சிசி மற்றும் 150சிசி மாடல்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை இந்த ஆண்டு முழுக்க விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு மாடல்களும் ஸ்பெசல் எல்லோ மெட்டாலிக் பாடிவொர்க் செய்யப்படுகிறது. இதன் சைடு பேனல் மற்றும் மட்கார்டு உள்ளிட்டவைகளில் 75 எண் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
வெஸ்பா நிறுவனம் தனது வாகனங்களை உலகம் முழுக்க சுமார் 83 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. வெஸ்பா வாகனங்கள் பொன்டெடரா, மற்றும் பரமதி உள்ளிட்ட ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வெஸ்பா பிராண்டு 1.8 கோடிக்கும் அதிக யூனிட்களை உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.