July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும்-வெங்கய்யா நாயுடு பேச்சு

The Vice President, Shri M. Venkaiah Naidu delivering his address virtually at an event organised to mark the Hindi Diwas, in New Delhi on September 14, 2020.

புது தில்லி, ஜூலை 22

பருவநிலை மாற்றம் மற்றும் ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

உலக பல்கலைக்கழகங்களின் உச்சி மாநாட்டை ஓ.பி.ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம் நடத்தியது. இதில் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றினார். மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றினார். இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், “”எதிர்கால பல்கலைக்கழகங்கள்: நிறுவன எழுச்சி, சமூக பொறுப்பு மற்றும் சமுதாய தாக்கத்தை உருவாக்குவது”. இந்த உச்சி மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பேசுகையில்,

“”பருவநிலை மாற்றம் மற்றும் ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும். உலகம் சந்திக்கும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் வி­யங்கள் குறித்து பல்கலைக்கழகங்கள் விவாதிக்க வேண்டும். தேவைக்கு தகுந்தபடி அரசால் அமல்படுத்தக்கூடிய கருத்துக்களை பல்கலைக்கழகங்கள் தெரிவிக்க வேண்டும்” என்றார்

Spread the love