உலகின் முதல் விவசாயி யார் தெரியுமா? எறும்புகள் தான் சரியான பதில். உங்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். உலக அளவில் அண்டார்டிகா கண்டத்தை தவிர மற்ற இடங்களில் பரவலாக 12 ஆயிரம் எறும்பு இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. எறும்புகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. தேனீக்கள் போல ராணி எறும்பு தலைமையிலான கூட்டமாக, கூட்டமாக வாழ்கின்றது. சாதாரணமாக எறும்புகளின் ஆயுள் காலம் 90 நாட்களே. மனிதர்களை போல தங்களுக்கு தேவையான உணவு தேவையைப் பூர்த்தி செய்ய விவசாயத்தில் ஈடுபடுபவை. மனிதர்கள் விவசாயம் செய்வதற்கு முன் முதலில் விவசாயம் செய்தது எறும்புகளே என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.
எறும்புகள் தங்களது எடை போல 50 மடங்கு எடையை தூக்கி செல்லக் கூடியவை. எறும்புகளால் நன்மையும், தீமையும் உண்டு. தீமை செய்ய கூடிய பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதுடன் அவற்றை உணவாக உட் கொள்கின்றன. அதுபோல மாவுபூச்சி, வைரஸ் போன்றவைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் கேரியர்யாக உள்ளது.
தங்களை எதிரிகளையிடமிருந்து தப்பிக்க பார்மிக் ஆசிட் உற்பத்தி செய்கிறது.
தடுப்பு முறைகள்
10 லிட்டர் தண்ணிரில் 1 கிலோ வசம்பு தூளை இடித்து 1 நாள் முழுவதும் கலந்து வைத்த பின், இதிலிருந்து ஒரு லிட்டர் கலவையை எடுத்து 9 லிட்டர் தண்ணிர் கலந்து தெளித்தால் எறும்புகளின் நடமாட்டம் கட்டுப்படும். எறும்பு புற்றுகளில் சுடு தண்ணிர் ஊற்றிட எறும்புகள் செத்து விடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த எறும்புகளை அழிக்காமல் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும்.