June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாணவ மாணவியர்கள் பேரணி

தேனி, ஜூன் 21

உலக சுற்றுச்சூழல் தின விழாவின் ஒரு நிகழ்வாக 21.06.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணி அளவில் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் பேரணி மூன்றாந்தாலில் இருந்து பெரியகுளம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள உட்லேண்ட்ஸ் ஓட்டல் வரை நடைபெற்றது. பேரணியை தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன், முன்னிலை ஏற்று நடத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பின் முக்கியத்துவம், நெகிழிப்பைகள் உபயோகத்தின் கேடு குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளுடன் மாணவ மாணவியர்கள் முழக்கமிட்டும் பேரணி சென்றனர். பேரணியின் முடிவில் முதல்வர் சுற்றுச்சூழல், பாதுகாப்பில் மரங்களின் பங்கு, நெகிழிப்பைகள் உபபோகப்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளில் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் வலியுறுத்தி விளக்க உரையாற்றினார். கல்லூரி மாணவர்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் நடுவதில் இளைய சமுதாயத்தினரின் பங்கு குறித்து பேசினர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நிகழ்வில் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Spread the love