August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு அட்டவணை நார்வே முதலிடம் பிடித்தது

புது தில்லி, ஏப்.21

எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்திரிகை சுதந்திர குறியீடு அட்டவனையில், இந்தியா 142-வது இடத்தை இந்தாண்டும் தக்க வைத்து மோசமான நிலையில் தொடர்வதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியிடப்பட்ட 180 நாடுகள் கொண்ட பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3-ம் இடங்கள் பிடித்துள்ளன என தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியா பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

நமது அண்டை நாடுகளான சீனா 177-வது இடத்திலும், பாகிஸ்தான் 145, நேபாள் 106, இலங்கை 127, வங்கதேசம் 152-ம் இடமும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவானது பத்திரிகை சுதந்திரத்தில் பிரேசில், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவுடன் மோசமான வகைப்பாட்டை பகிர்ந்து கொள்கிறது என அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு பத்திரிகையாளர் இந்தியாவில் விமர்சனங்களை வைத்தாலும் நடப்பு அரசு ஆதரவாளர்களால் தேச விரோதிகள் மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் என அச்சுறத்தப்படுவதாக என அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமர் மோடி ஊடகங்கள் மீதான தனது பிடியை இறுக்கி வருகிறார். 2020-ல் நான்கு பத்திரிகையாளர்கள் தங்கள் பணிக்காக இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love