தேனி, ஜூன் 2
தேனி மாவட்டம், உழவர் பயிற்சி மையம் (கால்நடை) மற்றும் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் இணைந்து உலக பால் தினம் 1.6.22 சுக்காங்கால்பட்டியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் உழவர் பயிற்சி மையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் பயிற்சி தலைவர் முனைவர் சே.செந்தில் குமார், கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் சுத்தமான தரமான பால் உற்பத்தியாகும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார். மெசப் ட்ரஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் எஸ்.முருகன், பால் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ம.இரம்யாசிவசெல்வி பாலில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் பற்றிய செயல்முறை விளக்கமளித்தார்.