October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்

கடலூர், அக்.11

கடலூர் டவுன் ஹாலில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மனநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் அக்டோபர் -10ம் தேதி சர்வதேச அளவில் உலக மன நல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த வருடத்தினுடைய கருத்து உலக சுகாதார மையத்தின் பரிந்துரைப்படி அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து சமுதாயத்தில் மனநலம் மற்றும் மனநோய்க்கு உண்டான சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக மனநல விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகின்றது.

மனநல ஆராய்ச்சிகள் மொத்த மக்கள் தொகையில் 1 சதம் தீவிரமன நோயினாலும் 10-15 சதம் மற்ற நோய்களினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என கணிக்கிறது.

சமுதாய விழிப்புணர்வுமற்றும் கல்வி மூலம் மனநோய் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றி மன நோய் மீதுள்ள மூட நம்பிக்கைகள் மற்றும் தவறான எண்ணங்களை அகற்றுவதற்காக இப்பேரணி நடத்தப்படுகின்றது. மேலும் மனநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுதுண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Spread the love