May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உளுந்தில் பூச்சி தாக்கத்தை குறைக்க வேளாண் மாணவிகள் இயற்கை பூச்சிக் கொல்லி பரிந்துரைப்பு

திருச்சி, மார்ச் 8

திருச்சி மாவட்டம், சிறுகமணியில் நெல் சாகுபடியைத் தொடர்ந்து மிதியடி உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. இப்பயிரில் துளைப்பான்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், பூ உண்ணும் பூச்சிகளின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டு வருகிறது. இப்பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் 3 ஜி கரைசலைப் பரிந்துரைத்து அதன் செயல்விளக்கத்தைச் செய்துகாட்டினர்.பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இவற்றின் சாறை மாட்டு கோமியத்தில் கலந்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 5மி.லி என்ற அளவில் 3 ஜி கரைசலை பயிர்களுக்கு அடித்து வந்தால் பூச்சிகளின் தாக்கம் குறையும்.

Spread the love