June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உளுந்து மஞ்சள் தேமல் நோய்

சிவகங்கை, ஜூன் 17

சிவகங்கை மாவட்டத்தில் சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்த உளுந்து பயிரில் சில இடங்களில் மஞ்சள் தேமல் நோய் காணப்படுகிறது.
அறிகுறிகள்:
· இளம் இலைகளில் மஞ்சள் நிறபுள்ளிகள் ஆரம்பத்தில் தோன்றும். புதிதாகதோன்றும் இலைகளில் மஞ்சள் மற்றும் பச்சைதிட்டுக்கள் காணப்படும்.
· புள்ளிகளின் அளவுஅதிகமாகி முடிவில் இலைமுழுவதும் மஞ்சளாக மாறிவிடும்.
· பயிர் வளர்ச்சி குறைந்து பூக்கள் மிகமிக குறைவாக இருக்கும். காய் எண்ணிக்கை குறைந்து மகசூல் பெரிதும் பாதிக்கப்படும்.
மேலாண்மை முறைகள்:
· கோடைபட்டத்தில் நோய் எதிர்ப்புசக்தியுள்ள உம்பன்-8, உம்பன்-10 ரகங்களைசாகுபடிசெய்யவேண்டும்.
· மஞ்சள் தேமல் பாதித்த பயிர்களைஆரம்பத்திலேயே பறித்து அழிக்க வேண்டும்.
· வரப்புபயிராக சோளம் 7 வரிசையில் விதைக்கவும்.
· இமிடோகுளோபிரிட் 5 மிலிஃகிலோஎன்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்

எனசிவகங்கை,விதைச் சான்றுமற்றும் அங்ககச்சான்றுஉதவி இயக்குநர் மதுரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Spread the love