நாகப்பட்டினம், மே 6
நாகப்பட்டினம் மாவட்டத்தில், வேதாரண்யம் வட்டாரத்தில், கருப்பன்புலம் கிராமத்தில், வள்ளுவன் என்ற விவசாயி 1 ஏக்கரில் வம்பன் 6 உளுந்து பயிரில் ஆதார நிலை 1 விதைப்பண்ணை அமைத்துள்ளார். மேலும் கலைச்செல்வி என்ற விவசாயி 5 ஏக்கரில் வம்பன் 8 சாகுபடி செய்துள்ள, விதைப்பண்ணையினை நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், ஆர்.சுதா, விதைச்சான்று அலுவலர்கள், மாறன் மற்றும் உதவி விதை அலுவலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. நெல் தரிசில் உளுந்து பயிரிடும் போது ஏக்கருக்கு சராசரியாக 200 கிலோ மகசூல் கிடைக்கும், வம்பன் 6 மற்றும் 8 இரகங்கள், மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி உடையது. அதிக மகசூல் அளிக்க கூடிய இரகம் ஆகும். இப்பகுதி மண் மணற்சாரியாக உள்ளதால் வம்பன் 6 மற்றும் 8 இரங்கள் நன்கு வளர்ந்து சிறந்த மகசூல் தருகிறது. இத்தகவலை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், நாகப்பட்டினம் தெரிவித்துள்ளார்.
Spread the love