புத தில்லி, மே 8
நாட்டில் கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந் நிலையில் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்காக 50 லட்சம் கோவிசீல்டு தடுப்பூசி டோஸ்களை தயாரித்து இருந்தது.
ஆனால் நாட்டில் கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு சீரம் நிறுவனம் மத்திய சுகாதாரத்துறைக்கு அண்மையில் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்திக்கொள்ள மேலும் 50 லட்சம் டோஸ்கள் தயாராக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் சில மாநிலங்களுக்கு தலா 3டி லட்சம் டோஸ்களும், பிற மாநிலங்களுக்கு தலா 1 லட்சம் டோஸ்களும், 2 மாநிலங்களுக்கு தலா 50 ஆயிரம் டோஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தடுப்பூசிகளில் கோவிUல்டு என்பதற்கு பதிலாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி என பெயரிடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.